தமிழகத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் 6,944 சிறார் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு!: மக்களவையில் உள்துறை இணை அமைச்சர் எழுத்துப்பூர்வ பதில்..!!
டெல்லி:
அதிமுக ஆட்சி காலத்தில் 2018, 2019, 2020 ஆண்டு காலத்தில் சிறார்களுக்கு எதிராக 6,944 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் தெரியவந்திருக்கிறது. மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு உள்துறை இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா எழுத்துபூர்வமாக பதிலளித்துள்ளார்.
அச்சமயம், சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை தடுக்கும் போக்சோ சட்டம் 376, 354 பிரிவில் வழக்குப்பதிவு விவரம் வெளியிடப்பட்டிருக்கிறது.
அதில், தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் கடந்த 2018ம் ஆண்டில் 1,881 வழக்குகளும், 2019ல் 2,216 வழக்குகளும், 2020ல் 2,847 பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
* தமிழகத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் 2018, 2019, 2020 ஆண்டு காலத்தில் சிறார்களுக்கு எதிராக 6,944 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளது.
* இந்தியாவில் அதிகபட்சமாக பாஜக ஆளும் உத்திரப்பிரதேசத்தில் கடந்த 2018 முதல் 2020 வரை 18,727 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
* மராட்டியத்தில் 2018 – 20 வரை 3 ஆண்டுகளில் சிறார் பாலியல் வன்கொடுமை தொடர்பாக 17,834 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
* மத்தியப்பிரதேசத்தில் 2018 முதல் 20 வரை 3 ஆண்டுகளில் மட்டும் ஒட்டுமொத்தமாக 13,879 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
* இந்தியாவில் 2018 முதல் 2020 வரை 3 ஆண்டுகளில் மட்டும் 1 லட்சத்து 17 ஆயிரத்து 89 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன.