Breaking News
ரூ.40 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை

சென்னை:

தங்கம் விலை சில நாட்களாகவே உயர்ந்த வண்ணமே காணப்பட்டு வருகிறது. நேற்று தங்கம் கிராம் ரூ.4,996 ஆகவும் சவரன், ரூ.39,968-க்கு விற்பனையானது.

இந்நிலையில், இன்று தமிழ்ப்புத்தாண்டையொட்டி தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகிறது.  சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.40,048-க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,006 ஆக இருக்கிறது.

வெள்ளி கிலோ ரூ.74,400-க்கு விற்கிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.40 ஆக உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.