Breaking News
5 ஆண்டுகளுக்கு பிறகு..! தாயை சந்தித்து காலில் விழுந்து ஆசி பெற்ற யோகி ஆதித்யநாத்
லக்னோ,
உத்தரப் பிரதேச முதல்வராக இரண்டாவது முறையாகப் பதவியேற்றுள்ளார் யோகி ஆதித்யநாத். இந்நிலையில் நேற்று அவர் மூன்று நாள் பயணமாக உத்தராகண்ட் மாநிலத்திற்கு சென்றார். அங்கு அவருடைய சொந்த கிராமமான பாவ்ரி கார்வால் மாவட்டத்தில் உள்ள பஞ்சூருக்குச் சென்றார்.
யோகி ஆதித்யநாத் கடைசியாக பிப்ரவரி 2017ல் அவர் சொந்த ஊர் சென்றார். ஏப்ரல் 2020ல் யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த் சிங் மறைந்தார். ஆனால் அப்போதுகூட கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக அவர் அங்கு செல்லவில்லை.
இந்நிலையில் யோகி ஆதித்யநாத்தின் மருமகனுக்கு இன்று குலதெய்வ கோவிலில் மொட்டை போடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்ளுமாறு யோகி ஆதித்யநாத்துக்கு அவரது தாய் மற்றும் உறவினர்கள் அழைப்பு விடுத்தனர். அதை ஏற்று யோகி ஆதித்யநாத், உத்தரகாண்டில் உள்ள தனது பூர்வீக கிராமத்துக்கு சென்றார்.
உத்தரபிரதேச முதல்மந்திரி ஆன பிறகு யோகி ஆதித்யநாத், தனது தாய் மற்றும் உறவினர்கள் யாரையும் சந்தித்து பேசாமலேயே இருந்தார். நேற்று முதன் முதலாக அவர் தனது தாய் சாவித்திரி தேவியை சந்தித்தார். அப்போது தாயின் காலில் விழுந்து யோகி ஆதித்யநாத் ஆசி பெற்றார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது டுவிட்டரில் பகிர்ந்த யோகி ஆதித்யநாத் அதற்கு அம்மா என்று தலைப்பிட்டுள்ளார்.
அரசுமுறை நிகழ்வாக அல்லாமல், குடும்ப விழாவில் கலந்துகொள்வதற்காக ஆதித்யநாத் உத்தரகாண்ட் சென்றது 28 ஆண்டுகளில் இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.