சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்
சென்னையில் நேற்று மாலை முதல் இடைவிடாமல் விடிய விடிய மழை பெய்தது. காலை வேளையிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
கடலூர், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கரூர், நீலகிரி மாவட்டங்களிலும் மழை பெய்யும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று மாலை முதல் இடைவிடாமல் விடிய விடிய மழை பெய்தது. காலை வேளையிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடலூர், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கரூர், நீலகிரி மாவட்டங்களிலும் மழை பெய்யும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.