இந்தியாவின் மக்கள்தொகை ஏற்கனவே சீனாவை முந்திவிட்டது- ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்
புதுடெல்லி
இந்தியா சீனாவை விட 50 லட்சம் மக்கள் தொகையை அதிகம் கொண்டு உள்லது என உலக மக்கள்தொகை ஆய்வு தெரிவித்து உள்ளது. உலக மக்கள்தொகை மதிப்பாய்வின் மதிப்பீடுகளின்படி, 2022 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவின் மக்கள்தொகை 141.7 கோடியாக இருந்தது, மக்கள்தொகை கணக்கெடுப்பு அமைப்பு மக்கள்தொகையில் கவனம் செலுத்தும் ஒரு சுயாதீன அமைப்பாகும்.
30 வயதுக்குட்பட்ட மக்கள்தொகையில் பாதி பேர் இருக்கும் இந்தியா, வரும் ஆண்டுகளில் உலகின் மிக வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இருக்கும். இந்த ஆண்டு இறுதியில் இந்த மைல்கல்லை எட்டும் என ஐக்கிய நாடுகள் சபை எதிர்பார்த்திருந்தது. உலக மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி ஜனவரி 18 வரை, இந்தியாவின் மக்கள் தொகை ஏற்கனவே 142.3 கோடியாக உயர்ந்துள்ளது.
ஆராய்ச்சி தளமான மேக்ரோடிரெண்ட்ஸின் மற்றொரு மதிப்பீட்டின்படி, இந்தியாவின் சமீபத்திய எண்ணிக்கை 142.8 கோடியாக உள்ளது. மே 2024க்குள் பொருளாதாரத்தில் உற்பத்தித் துறையின் பங்கை தற்போதைய 14% இல் இருந்து 25% ஆக உயர்த்த பிரதமர் மோடி முயற்சித்து வருகிறார்.
இந்தியா இப்போதைக்கு, ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடு ஆகும். உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளது. அரிசி, கோதுமை மற்றும் சர்க்கரை உற்பத்தியில் இரண்டாவது பெரிய உற்பத்தியாளராக இந்தியா உள்ளது. ஒரு சந்தையாக, இந்தியா, அதன் வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்துடன், சர்க்கரையின் மிகப்பெரிய நுகர்வோர் ஆகும், அதே நேரத்தில் சமையல் எண்ணெய்களின் முதல் இறக்குமதியாளராக உள்ளது.
இது தங்கம் மற்றும் எஃகின் இரண்டாவது பெரிய நுகர்வோர் மற்றும் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் வாங்கும் நாடு ஆகும். இது உலகின் மூன்றாவது பெரிய உள்நாட்டு விமான சந்தையின் தாயகமாகவும் உள்ளது. இந்தியாவின் மக்கள்தொகை வளர்ச்சி குறைந்திருந்தாலும், குறைந்தபட்சம் 2050 வரை இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயரும் என உலக மக்கள் தொகை கணக்கீடு அமைப்பு எதிர்பார்க்கிறது. மறுபுறம், சீனாவில் மக்கள் தொகை அதிகரிப்பில் ஒரு சிறிய சரிவு காணப்படுகிறது.
தேசிய புள்ளியியல் பணியகத்தால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, சீனாவின் மக்கள்தொகை 2022 இல் 8,50,000 குறைந்துள்ளது. 2022 மற்றும் 2050 க்கு இடையில் உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேலான அதிகரிப்பு காங்கோ, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் தான்சானியா ஆகிய எட்டு நாடுகளில் மட்டுமே நடந்திருக்கும் என்று ஐ.நா மதிப்பிடுகிறது.