Breaking News
அரக்கோணம் கீழவீதியில் திரெளபதி அம்மன் கோயில் விழாவில் கிரேன் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

அரக்கோணம்:

அரக்கோணம் கீழவீதியில் திரெளபதி அம்மன் கோயில் விழாவில் கிரேன் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. கிரேன் விபத்தில் காயமடைந்த 85 வயது சின்னசாமி திருவள்ளூர் மருத்துவனமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கீழவீதி கிராமத்தில் திரெளபதி அம்மன் கோயில் திருவிழாவில் கிரேன்முலம் மாலை அணிவிக்க முயன்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. அம்மனுக்கு மாலை அணிவிக்க முயன்றபோது கிரேன் கவிழந்து பூபாலன், முத்து, ஜோதிபாபு ஆகியோர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே கோயில் திருவிழாவில் கிரேன் அறுந்து விழுந்ததில் பிளஸ் டூ மாணவர் உட்பட 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். கைக்குழந்தை உட்பட 9 பேர் காயமடைந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த கீழ்வீதி பகுதியில் உள்ள மண்டியம்மன் கோயில் மயிலர் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் பக்தர்கள் கிரேனில் தொங்கி வந்தவாறு சாமிக்கு மாலை அணிவிக்க வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கிரேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் அந்தரத்தில் தொங்கியபடி வந்த கீழ்வீதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவர் ஜோதி பாபு கீழே விழுந்து உயிரிழந்தார்.

இந்த விபத்தில் ஒரு பெண் குழந்தை உட்பட 9 பேர் படுகாயம் அடைந்து நெமிலி அடுத்த புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரக்கோணம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நெமிலி வட்டாட்சியர் சுமதி , கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயில் திருவிழாவில் நடந்த கிரேன் விபத்து அங்குச் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.