அரசு வேலை போய்விடும் என்று கருதி 3-வதாக பிறந்த பெண் குழந்தையை கால்வாயில் வீசிய தம்பதி..!
ஜெய்பூர்,
ராஜ்ஸ்தானில் அரசு துறையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வரும் ஜவர்லால் மேக்வால் (வயது 36) இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. இந்தநிலையில் அவரது மனைவி கர்ப்படைந்தார். சமீபத்தில் அவர்களுக்கு 3-வதாக குழந்தை பிறந்தது.
மாநில அரசின் இரண்டு குழந்தைகள் திட்டத்தால் நிரந்தர வேலை குறித்த அச்சம் அவருக்கு ஏற்பட்டது. இந்தநிலையில், அவரும் அவனது மனைவியும் மூன்றாவது குழந்தையால் தனது வேலையில் எந்த விதி பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஐந்து மாத பெண் குழந்தையை கால்வாயில் வீசி உள்ளனர். மூன்றாவது குழந்தை பிறந்தவுடன் அரசு ஊழியர்கள் கட்டாய ஓய்வு பாலிசி அந்த மாநிலத்தில் உள்ளது.
இதுகுறித்து பிகானேர் காவல் கண்காணிப்பாளர் யோகேஷ் யாதவ் கூறுகையில், “தங்கள் மகளைக் கொன்ற வழக்கில் தம்பதியர் நேற்று கைது செய்யப்பட்டனர். நிரந்தர அரசுப் பணியைப் பெறுவதற்காக குற்றம் சாட்டப்பட்ட நபர், உடந்தையாக இருந்த மனைவியும் சேர்ந்து கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்” என்றார்.
பிகானேர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த தம்பதியினர் 5 மாத பெண் குழந்தையை சத்தர்கர் காவல் நிலையப் பகுதியில் உள்ள கால்வாயில் வீசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.