தமிழ்நாடு நிதித்துறை சார்பில் புதிய வலைதளம் தொடக்கம் – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை,
தமிழ்நாடு நிதித்துறை சார்பில் மாநில பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிக்க புதிய வலைதளம் ஒன்றை தொடங்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து http://ccfms.tn.gov.in என்ற புதிய வலைதளம் தொடங்கப்பட்டது.
இந்த வலைதளத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து தொடங்கி வைத்தார். அப்போது அவருடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.