இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுவடையும்: வானிலை மையம்
சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுவடையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தவெறிவித்துள்ளது.
சென்னையில் இன்று பரவலான இடங்களில் லேசான மழை பெய்தது. மயிலாப்பூர், மந்தைவெளி, பட்டினப்பாக்கம், திருவான்மியூர், அடையாறு, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, சோழவரம், செங்குன்றம் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை மிதமான மழை பெய்தது.
மேலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், தஞ்சை, நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல், இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுவடையும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனால் தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.