ஒடிசாவில் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸ் உயிரிழப்பு
ஒடிசா: ஒடிசாவில் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸ் உயிரிழந்தார். புவனேஸ்வர் தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸ் உயிரிழந்தார்.
ஒடிசாவில் பிரஜாராஜ் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றபோது அமைச்சர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. உதவி சார்பு ஆய்வாளர் கோபால் தாஸ் துப்பாக்கியால் சுட்டதில் நபா தாஸ் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது உயிரிழப்பிற்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இது குறித்து விசாரணை நடத்த குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார். அமைச்சர் நபா தாஸ் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் குண்டு அவரது நெஞ்சில் பாய்ந்து முதுகு வழியாக வெளியேறியுள்ளதால் இதயம், நுரையீரலில் காயம் ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசா மாநில அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸ் ஜார்சுகுடா மாவட்டத்தில் உள்ள பிரஜராஜ்நகர் அருகே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்த நிலையில் அமைச்சர் நபா தாஸ் தனது வாகனத்தில் இருந்து இறங்கும்போது உதவி காவல் ஆய்வாளர் ஒருவர் அவர் மீது திடீரென துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதில் படுகாயமடைந்த அமைச்சர் நபா தாஸ், நெஞ்சில் குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், இது குறித்து விசாரணை நடத்த குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டார். இந்த தாக்குதலுக்கான உண்மையான காரணம் தெரியவில்லை.
அமைச்சரின் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் உயரதிகாரியான கோபால் தாஸ் என்பவர், மிக நெருக்கத்தில் திடீரென நான்கைந்து முறை துப்பாக்கியால் அமைச்சரை நோக்கி சுட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். காவல் உதவி ஆய்வாளர் ஒருவரே அமைச்சரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.