நீரில் மூழ்கிய உலகில் இருந்து வெளியான பாடலும் வாக்குமூலங்களும்
வெள்ளம் வந்து ஒரு மாதத்திற்குப் பிறகும், பல வீடுகள் இன்னும் நீரில் மூழ்கியிருப்பதைக் கண்ட புகைப்பட கலைஞர் கிதியோன் மெண்டல் அவற்றை படமெடுத்து காட்சிப்படுத்தியுள்ளார். நைஜீரியாவின் பயேல்சா பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நீரில் மூழ்கிய வீடுகளுக்கு மத்தியில் நிற்கும் மக்களின் புகைப்படங்கள் காலநிலை மாற்றத்தின் விளைவுகளை எதிரொலிக்கிறது.
“தண்ணீர் மெதுவாக வடிவதால், என்னை மக்கள் அவர்களின் வீடுகளுக்கு படகில் அழைத்துச் சென்றனர்,” என்கிறார் கிதியோன் மெண்டல்.
“இது நான் பார்க்கும் மூன்றாவது வெள்ளம். ஆனால் பார்த்ததில் மிகவும் மோசமானது” என்று ஒக்பியா நகரைச் சேர்ந்த கிஃப்ட் இகுரு கூறினார்.
“என் உடமைகள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன. எங்களுக்கு தங்குமிடம் இல்லாததால், சாலையோரம் படுத்து தூங்குகிறோம்.”