முருங்கை பூ தேன் உற்பத்தி மூலம் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டும் பெண்கள்
முருங்கை பூவில் இருந்து தேனீக்கள் எடுக்கும் தேனை பெட்டி வைத்து சேகரித்து பெண்கள் விற்பனை செய்து வருகின்றனர்.
ஒரு வருடத்திற்கு மூன்று மாதம் பெட்டியில் இருந்து தேன் சேகரிக்கின்றனர்.
ஒரு பெட்டியில் 7 லிட்டர் தேன் கிடைக்கிறது. ஒரு லிட்டர் தேன், 500 முதல் 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
முருங்கை பூ தேன் மற்ற தேனை காட்டிலும் அதிக கெட்டியாக உள்ளது. மருத்துவ குணமிக்கது எனச் சொல்லப்படும் இந்த முருங்கைப் பூ தேனுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளதாகக் கூறுகிறார் வேதா.
முருங்கைப் பூ தேன் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சௌதி அரேபியா, துபாய், கத்தார், இந்தோனீசியா போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.