ரூ.1,155 கோடி மதிப்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியீடு
சென்னை,
ரூ.1,555 கோடி மதிப்பில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு நிர்வாக அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2022 – 23ம் ஆண்டில் 2,544 கிராமங்களில் மேம்பாட்டு திட்டப் பணிகள் நடைபெற உள்ளன.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை செயல்படுத்த, கண்காணிக்க மாநில அளவில் தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 18 துறைகளைச் சேர்ந்த முதன்மைச் செயலாளர்கள் குழுவின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.