அம்பத்தூர் பால் பண்ணையில் இயந்திர கோளாறு காரணமாக பால் அனுப்ப கால தாமதம்: அதிகாரிகள் பணியிடைநீக்கம்
சென்னை: இயந்திர கோளாறு காரணமாக அம்பத்தூர் பால் பண்ணையில் இருந்து சில இடங்களுக்கு ஆவின் பால் அனுப்ப காலதாமதமானது. பால் அதிகாலையில் விநியோகம் செய்யப்பட்டிருக்க வேண்டும் ஆனால், சில விநியோகஸ்தர்கள் சரியாக விநியோகம் செய்யாததால் நுகர்வோர்கள் பாதிக்கப்பட்டனர்.
இதனால் இயந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும், உதவி பொது மேலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தர உறுதி பணிகளை மேற்கொள்ளும் பொது மேலாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இயந்திர கோளாறு மற்றும் பால் அனுப்புவதில் காலதாமதம் ஏற்பட்டது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு கடுமையா நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பால்வளத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.