13 ஆண்டுகளாக ஆற்றுக்குள் கிடந்த கேமராவில் இருந்து கிடைத்த அதிசயம்
இந்தப் பழைய டிஜிட்டல் கேமரா அமெரிக்காவிலுள்ள கொலராடோ ஆற்றில் கிடைத்தது. அதன்பின் உரிமையாளருக்கான தேடுதலும் கூடவே தொடங்கியது.
அதுகுறித்துப் பேசிய ஸ்பென்சர் கிரெய்னர், “நான் ஆற்றங்கரையில் மீன் பிடிக்கும் இடங்கள் ஒவ்வொன்றாக நடந்து சென்றுகொண்டிருந்தேன். வசந்த காலம் தொடங்கியிருந்ததால் பனிக்கட்டிகள் உருகி, அதற்கு அடியில் சிக்கியிருந்த குப்பைகள் சிறிது சிறிதாக மேலே வந்துகொண்டிருந்தன,” எனக் கூறுகிறார்.
அந்தக் குப்பைகளைச் சேகரித்துத் தனது பையில் போட்டுக் கொண்டிருந்தவர், குப்பைகளுக்கு நடுவில் கேமராவை போல் ஒன்று கிடந்ததைப் பார்த்தார்.
“அது அங்கு நீண்ட நாட்களாகக் கிடப்பது, பார்த்த உடனேயே தெரிந்தது. வீட்டிற்குத் திரும்பி வந்ததும், அதில் ஏதாவது விஷயம் உள்ளதா என்று பரிசோதித்தேன்,” என்கிறார் கிரெய்னர்.
அதிசயிக்கும் வகையில், அதிலிருந்த படங்களும் வீடியோக்களும் அப்படியே இருந்தன. ஸ்பென்சர் அவற்றில் சில புகைப்படங்களை உள்ளூர் ஃபேஸ்புக் குழு ஒன்றில் பகிர்ந்தார்.