சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் சற்றுமுன் நடந்த பரிதாபம்
சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் தனது சொந்த ஊர் செல்வதற்காக ரயில்வே நிலையத்திற்கு இன்று இரவு பத்து மணி அளவில் வந்துள்ளார் .
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆர்பிஎப் போலீசார் அந்த வாலிபரை சோதனை இட்ட பொழுது இந்த வாலிபர் குடித்து இருந்ததாக கூறப்படுகிறது .
அதைக் கண்ட ஆர் பி எப் போலீசார் இந்த வட மாநில வாலிபரை ரயில்வே நிலையத்தின் உள்ளே இருந்து விரட்டிக் கொண்டு வந்த பொழுது.
இந்த வாலிபர் கால் இடறி தரையில் பலத்த சத்தத்துடன் கீழே விழுந்து விட்டார் .
இதனால் அவரது தலையில் காதில் வயிற்றுப் பகுதியில் ரத்தம் வெளியேறியதால் வாலிபர் சுய நினைவு இழந்து தரையில் விழுந்து கிடந்து உள்ளார்.
இதை அப்பகுதியில் பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் rpf காவல்துறையினரிடம் ஏன் இந்த வாலிபரை விரட்டிக் கொண்டு வந்தீர்கள் என்று கேட்க அதற்கு சரியான பதிலை கூறாத.
காவலர்களுடன் பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது .
இறுதியாக தலையில் பலத்த காயமடைந்த அந்த வாலிபரை 108 ஆம்புலன்ஸ் மூலமாக சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் சம்பவ இடத்திலிருந்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல உள்ளனர்