குன்றத்தூர் நகராட்சியில் ரூ 1.24 கோடியில் பூங்கா அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்
குன்றத்தூர் நகராட்சியில் ரூ.1.24 கோடியில் அமைக்கப்பட்ட பூங்காக்களை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்.
குன்றத்தூர் நகராட்சியில் மேத்தா நகர், பூபதி அவின்யூ, மெட்ரோ ஹைடெக் ரெசிடென்சி, மணிகண்டன் நகர் ஆகிய இடங்ஙளில் ரூ.1 கோடியே 24 லடசம் செலவில் பூங்காக்கள் புனரமைக்கப்பட்டது.
இதே போல நகராட்சி அலுவலகத்தில் கூடுதல் இணைப்பு கட்டிடம் ரூ 50 லட்சம் கட்டப்பட்டு உள்ளது.
இதே போல ஸ்ரீபெருமந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 11.10 லட்சத்தில் சேக்கிழார் நகரில் அங்கன்வாடி கட்டிடம், மற்றும் நகராட்சி பொது நிதியிலிருந்து ரூ 20 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட கலைஞர் நகர் சமுதாய நலக் கூடம் ஆகியவற்றின் திறப்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு நகராட்சி தலைவர் கோ.சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் தாமோதரன் , துணைத் தலைவர், கவுன்சிலர்கள் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில் சிறு குறு தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஸ்ரீபெருமந்தூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, சட்டமன்ற உறுப்பினர் செல்வ பெருந்தகை ஆகியோர் கட்டிடங்கள், பூங்காக்காக்களை திறந்து வைத்தனர்.
மேலும் , ரூ 2.12 கோடி மதிப்பீட்டில் பாலவராயன் குளம் மேம்பாடு , ரூ.27 லட்சம் செலவில் நத்தம் பகுதி, திருநாகேஸ்வரம் பகுதிகளில் செய்யப்பட உள்ள பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.