அ.தி.மு.க. ஆட்சியில் தான் சிறுபாண்மை மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது முன்னாள் அமைச்சர் பென்ஜமின் பேச்சு
அ.தி.மு.க.ஆட்சியில் தான் சிறுபான்மை மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன என முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் பேசினார். திருவள்ளூர் மத்திய மாவட்ட அ.தி.மு.க.சார்பில் பூந்தமல்லி குமணன்சாவடியில் இப்தார் நோன்பு விழா நடைபெற்றது.இவ்விழாவிற்கு முன்னாள் அமைச்சரும் , மாவட்டச் செயலாளருமான பா.பென்ஜமின் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் சல்மான் ஜாவித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் அ.தி.மு.க. அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர் விஜய் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு , இப்தார் நோன்பை திறந்து வைத்தனர்.பின்னர் ஏழைகளுக்கு வேட்டி , சேலைகள் வழங்கினார்கள்.முன்னதாக இவ்விழாவில் முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் பேசியதாவது :- அ.தி.மு.க. ஆட்சியில் தான் சிறுபாண்மை மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.ஜெயலலிதா ஆட்சியில் தான் சிறுபாண்மை மக்கள் புனிதா மெக்கா பயணம் மேற்கொள்ள நிதி உதவி வழங்கப்பட்டது.இதே போல கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள நிதி உதவி அளிக்கப்பட்டது.கிறிஸ்தவ தேவாலயங்கள் புனரமைக்க நிதி உதவி அளிக்கப்பட்டது.அ.தி.மு.க.பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அ.தி.மு.க.வின் அவைத் தலைவராக சிறுபாண்மை பிரிவைச் சேர்ந்த தமிழ் மகன் உசேனை நியமித்தார். இப்படி அ.தி.மு.க.ஆட்சியிலும், கட்சியிலும் சிறுபாண்மை மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது.இவ்வாறு முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் பேசினார். இவ்விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. இரா.மணிமாறன், கா.சு.ஜனார்த்தனம், பூவை எம்.ஞானம், சி.சார்லஸ் ,கே.ஜி.டி.கவுதமன், புட்ளூர் சந்திரசேகரன், ராஜா என்கிற பேரழகன், க.வைத்தியநாதன், எஸ்.கோபிநாத், அந்தமான் கே.முருகன், கார்ல் மார்க்ஸ், அபிஷேக் ஜேக்கப், பூவை.நடராஜன், டி.தேவேந்திரன், டி.பத்மநாபன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.