Breaking News

 

 

ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் தீடீரென தீ விபத்து ஏற்பட்டது .இதனால் அதிகாரிகள்; ஊழியர்கள் அலறி அடித்து வெளியேறினர்.

ஆவடி மாநகராட்சி அலுவலகம் ஆவடி மார்க்கட் அருகே இயங்கி வருகிறது.இந்த அலுவலகம் தரைத் தளம், முதல் தளத்தில் இயங்கி வருகிறது.

தரைத்தளத்தில் மாநகராட்சி ஆணையாளர் க.தர்ப்பகராஜ் அறை, மேயர் உதயகுமார் அறை, துணை மேயர் சூரியகுமார் அறை , துணை ஆணையாளர் விஜயகுமாரி அறை , மாநகராட்சி பொறியாளர் ரவிசந்திரன் அறை, பொது அலுவலகம் இயங்கி வருகிறது.

முதல் தளத்தில் நகர அமைப்பு அலுவலர் விமலா அறை , சுகாதார அலுவலர்கள் எஸ்.ஆல்பர்ட் அருள்ராஜ் , மொகைதீன் ஆகியோர் அறை , உதவி வருவாய் அலுவலர்கள் திலகம், இந்திராணி ஆகியோர் அறைகள் , வருமாய் துறை மற்றும் நகர அமைப்பு பிரிவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு மேல் மாநகராட்சி அலுவலகத்தின் மொட்டை மாடியில் தீடீரென தீப்பிடித்து எரியத் துவங்கியது.

இதனையறிந்த அதிகாரிகள், ஊழியர்கள் மின்னல் வேகத்தில் அலுவலகத்தை விட்டு வெளியேறினர்.மேலும் தீ விபத்தால் அலுவலகத்தின் உள்ளே புகை மூட்டம் ஏற்பட்டது.இதனால் அனைவரும் அலுவலகத்தை விட்டு வெளியேறினர். பின்னர் அருகில் உள்ள தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.உடனே , தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து , மின்சாரத்தை நிறுத்தி விட்டு , தீயை அணைத்தனர்.

புகை மூட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம் அதிகாரிகள் , ஊழியர்கள் உள்ளே செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.

வெயிலின் வெப்பத்தால் , மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

இதுபற்றி ஆவடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.