தொழில் தொடங்க அடிப்படை வசதிகள் இல்லாத மாநிலம் தமிழகம்
தொழில் தொடங்க வசதியான மாநிலங்கள் பட்டியலில் ஆந்திரா, தெலுங்கானா, குஜராத் மாநிலங்கள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. இந்தப் பட்டியலில் தமிழகம், கேரளா, அசாம் ஆகிய மாநிலங்கள் கடைசி மூன்று இடங்களில் உள்ளன.
உரிமம் பெறும் நடைமுறைகள், சூழ்நிலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் தொழில் தொடங்க வசதியான மாநிலங்கள் பட்டியலை நிதி ஆயோக் முதன்மைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் வெளியிட்டார். இந்தப் பட்டியலில் ஆந்திரா, தெலுங்கானா, குஜராத் ஆகிய மாநிலங்கள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. தமிழகம், கேரளம், அசாம் ஆகிய மாநிலங்கள் கடைசி மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. மின்வசதி, கல்வி வளர்ச்சி ஆகியவற்றில் தமிழகம் முன்னணியில் இருந்தாலும் தொழில் தொடங்குவதற்கும், முதலீட்டை ஈர்ப்பதற்கும் ஏற்ற மாநிலமாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.