நாகாலாந்தில் நம்பிக்கை ஓட்டெடுப்பு: தோல்வி பயத்தால் சட்டசபைக்கு வராத முதல்வர்
நாகாலாந்தில் முதல்வர் லெய்சீட்சுவுக்கு எதிராக முன்னாள் முதல்வர் ஜெலியாங், தமக்கு பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக கூறி, ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் கவர்னர் ஆச்சார்யாவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார். இதனால் நாகாலாந்து அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் லெய்சீட்சு வரும் ஜூலை 15-ம் தேதிக்குள் சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தி மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் உத்தரவிட்டார். கவர்னரின் உத்தரவுக்கு தடை கோரி கவுகாத்தி ஐகோர்ட் கோகிமா கிளையில் லய்சீட்சு தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது. உடன் கவர்னர் ஆச்சார்யா இன்று (ஜூலை 19) காலை 9.30 மணிக்கு சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்டி பெருமபான்மை நிரூபிக்க உத்தரவிட்டார்.இதனையடுத்து சட்டசபை இன்று கூடியது. ஆனால் தோல்வி பயத்தால், முதல்வர் லெய்சீட்சு சட்டசபைக்கு வரவில்லை. இதனையடுத்து சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.