உங்கள் மனைவியை விற்று விடுங்கள் : நீதிபதி சர்ச்சை பேச்சு
உங்களால் கழிப்பிடம் கட்ட முடியவில்லை என்றால் உங்கள் மனைவியை விற்று விடுங்கள் என்று மாவட்ட நீதிபதியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்கபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பீகாரில் மாவட்ட நீதிபதியாக உள்ள கண்வால் தனுஜ், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அந்த கிராமத்தில் வீடுகளில் கழிப்பிடம் கட்டுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் கூட்டத்தில் கலந்து கொண்டு கிராமத்தினர் முன்னிலையில் பேசினார்.
அவர் பேசுகையில் :‛‛நீங்கள் எவ்வளவு ஏழையாக இருந்தாலும் உங்கள் மனைவியின் கவுரவத்திற்கு மரியாதை கொடுங்கள், ஒரு கழிப்பிடம் கட்ட அதிகபட்சம் 12,000 ரூபாய் செலவாகும், உங்கள் மனைவியின் கவுரவம் ரூ 12,000 க்கும் குறைவாகவா மதிப்பிடுகிறீர்கள். வெறும் 12,000 ரூபாய்க்காக உங்கள் மனைவியின் கவுரவத்தை விற்க முடியுமா உங்களால்?, உங்களால் கழிப்பிடம் கட்ட முடியவில்லை என்றால் உங்கள் மனைவியை விற்று விடுங்கள், உங்களில் பலர் தேவையில்லாமல் நிறைய செலவு செய்வீர்கள். அத்தியாவசியமான செலவிற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.” இவ்வாறு பேசினார்.