போலியை கண்டுபிடிக்க ஆர்.பி.ஐ., புது திட்டம்
செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ள ரூபாய் நோட்டுகளில், போலிகள் உள்ளனவா என்பதை கண்டுபிடிக்கும் கருவியை, வாடகைக்கு வாங்க, ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
‘டிபாசிட்’புழக்கத்தில் இருந்த, பழைய, 500 – 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதென, மத்திய அரசு கடந்தாண்டு அறிவித்தது. பொதுமக்கள், செய்த செல்லாத நோட்டுகள் அனைத்தும், ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கப் பட்டன.செல்லாத ரூபாய் நோட்டு தொடர்பாக, பார்லிமென்ட் குழு கூட்டத்தில், சமீபத்தில் ஆஜரான, ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல், ‘செல்லாத ரூபாய் நோட்டுகளை தொடர்ந்து எண்ணி வருகிறோம்’ என்றார்.
இந்நிலையில், செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ள, ரூபாய் நோட்டுகளில், போலி நோட்டுகளும் உள்ளனவா என்பதை கண்டுபிடிக்க உதவும் கருவிகளை, வாடகைக்கு எடுக்க, ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. இதற்கான, டெண்டர் சமீபத்தில் கோரப்பட்டு உள்ளது.
அறிவிப்பு : மத்திய நிதி அமைச்சகத்தின் புள்ளிவிபரங்களின்படி, செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியிடப்பட்ட அன்று, நாடு முழுவதும், 1,716 கோடி எண்ணிக்கையுள்ள, 500 ரூபாய் நோட்டுகளும், 685 கோடி எண்ணிக்கையுள்ள, 1,000 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் இருந்தன.