அமெரிக்காவில் ஜனவரி 11-ம்தேதி பத்திரிக்கையாளர்கள் மாநாடு டொனால்டு டிரம்ப் பங்கேற்கிறார்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றிபெற்றதை தொடர்ந்து ஜனவர் 11-ம்தேதி பத்திரிக்கையாளர்கள் மாநாடு நடக்க இருப்பதாக டொனால்டு டிரம்ப் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் ஜனவரியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மாதம் நடந்தது. இதில், ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் பிரபல தொழில் அதிபர் டொனால்டு டிரம்பும் போட்டியிட்டனர்.
மொத்தமுள்ள 538 உறுப்பினர்களில், 270 உறுப்பினர்களின் ஆதரவு பெற்றவரே, அமெரிக்க அதிபராக முடியும். இதில், டிரம்ப், 279 தேர்வு குழு உறுப்பினர்களையும், ஹிலாரி, 218 தேர்வு குழு உறுப்பினர்களின் ஆதரவையும் பெற்றனர். இதனையடுத்து கருத்து கணிப்புகளை பொய்யாக்கி அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் அமெரிக்காவின் 45-வது அதிபராக பதவியேற்கும் டொனால்டு டிரம்ப் ஜனவரி 11-ம்தேதி பத்திரிக்கையாளர்கள் மாநாடு நடைபெற இருப்பதாக அவர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். இந்த பத்திரிக்கை மாநாடு 9 நாட்கள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.