சவுதிக்கு செல்ல நிபந்தனை அனுமதி
கத்தார் நாட்டு பயணிகள் சவுதி அரரேபியாவிற்கு இனி இரண்டு விமான நிலையங்கள் வழியாக வருவதற்கு அந்நாட்டு அரசு அனுமதித்துள்ளது. கத்தார் பயணிகள் ஜேட்டாவில் உள்ள கிங் அப்துல்லாசிஸ் ஏர்போர்ட் மற்றும் மெதீனாவில் உள்ள முகம்மது பின் அப்துல்லாசிஸ் ஏர்போர்ட் வழியாகத்தான் சவுதி அரேபியாவுக்கு வரவேண்டும், என சவுதி அரபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம், கத்தார் நாட்டுடனான உறவுகளை முறித்துக்கொள்வதாக சவுதி அரேபியா அறிவித்தது. இதனால் கத்தார் நாட்டினர் மெக்காவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் எகிப்துடன் சேர்ந்து, கத்தார் உடனான உறவுகளை முறித்துக்கொண்டது. அந்நாடு பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பதாகவும் மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதாகவும் குற்றம் சாட்டியது.இந்நிலையில் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு விமானங்கள் வழியாக மட்டும் இனி கத்தார் பயணிகள் மெக்காவுக்கு செல்ல முடியும்.