நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் அணிகள் இணைப்பு தானாக நிகழும்-மாஃபா பாண்டியராஜன்
அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று காலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட இருப்பதாகவும், அது தொடர்பான பொறுப்பு தனக்கு இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஓ. பன்னீர் செல்வம் அணி சார்பில் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டம் முடிந்ததும் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
கட்சி வளர்ச்சி தொடர்பாகவும், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.அணிகள் இணைப்பு தொடர்பாக எதுவும் பேசவில்லை, எங்கள் அணியின் 2 கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே பேச்சுவார்த்தை .
தொண்டர்களை ஒருங்கிணைத்து அடிப்படை கட்டமைப்பை உருவாக்குவது குறித்து ஆலோசனை நடத்தினோம்
ஓபிஎஸ் அணியின் நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் அணிகள் இணைப்பு தானாக நிகழும்
சசிகலா மற்றும் தினகரனை கட்சியில் இருந்து விரைவில் வெளியேற்றுவார்கள் என நம்புகிறாம்
ஓபிஎஸ் அணிக்குத்தான் கட்சி அலுவலகம் கிடைக்க வேண்டும். ஓ.பி.எஸ் அணியில் எந்த அதிருப்தியும் இல்லை.
மதுரையில் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய போது பொதுவான பிரச்சினைகள் குறித்து தான் பேசப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.