பாதுகாப்பு விஷயங்களில் இந்தியா அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவதை எதிர்பார்க்கிறது – வெளியுறவுச் செயலர்
பாதுகாப்பு, வர்த்தகம் ஆகியன மீதான ஆலோசனை கூட்டம் ஒன்றில் பேசிய அவர் பாதுகாப்பு மட்டுமின்றி பொருளாதார விஷயங்களிலும் இந்தியா அமெரிக்காவுடன் நெருங்கி செயலாற்றுவது எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
மோடியும், டிரம்பும் சந்தித்துக் கொண்டப் போதே இருவரின் மனதும் ஒன்றிணைந்து செயல்படும் என்பது தெரிந்து விட்டது என்றார் ஜெய்சங்கர்.
கடந்த மூன்று ஆட்சிகளிலும் அமெரிக்காவுடனான இந்திய உறவு வளர்ந்து வந்துள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இரு நாடுகளுக்கு இடையிலான உறவு வர்த்தகத்தில் மையம் கொண்டுள்ளது என்றார் அவர். மோடி அமெரிக்க வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களை அழைத்துப் பேசியது வெள்ளை மாளிகை வரை எதிரொலித்துள்ளது என்றார் ஜெய்சங்கர். இதுவரை பல நாடுகளுடன் வர்த்தக ரீதியில் இந்தியா நெருங்கி வரவில்லை என்றார் அவர்.
பொருளாதாரம் தவிர்த்து பாதுகாப்பு விஷயத்திலும் இந்தியா அமெரிக்காவும் இணைந்து செயல்பட அரசியல் ரீதியிலான நிலைமைகள் உள்ளன என்பதையும் செயலர் சுட்டிக்காட்டினார். ஐந்தாண்டுகளுக்கோ அதற்கு பின்னரோ இந்தியாவில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தால் அமெரிக்கா தவிர்க்க முடியாத கூட்டாளியாக இருக்கும் என்ற எண்ணமிருந்தது. அப்படியொரு உறவு அன்றாட வாழ்வில் காணக்கூடிய தாக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்றார் ஜென்சங்கர்.