போலீசாருக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடு; ஒன்றின் விலை ரூ.2 லட்சம்!!!
கடிதம்:இந்நிலையில், தமிழக போலீசாருக்கு வாங்கப்பட்ட வாக்கி டாக்கி டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாக, தமிழக டி.ஜி.பி.,க்கு விளக்கம் கேட்டு, உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி கடிதம் அனுப்பியுள்ளார். டெண்டர் வழங்கப்பட்டது குறித்து 11 கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார்.
ரூ.2.08 லட்சம்:காவல்துறை நவீனமயமாக்கும் திட்டத்தின்படி 2017-18ம் ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.47.56 கோடிக்கு 10 ஆயிரம் வாக்கி டாக்கிகள் வாங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ரூ.83.45 கோடிக்கு டெண்டர் போடப்பட்டு வெறும் 4 ஆயிரம் வாக்கி டாக்கிகள் மட்டுமே வாங்கப்பட்டிருக்கின்றன. இதன்படி ரூ.47 ஆயிரத்துக்கு வாங்கப்பட்டிருக்க வேண்டிய ஒரு வாக்கி டாக்கி, ரூ.2.08 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக விளக்கம் கேட்டும் நிரஞ்சன் மார்டி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் வாக்கி டாக்கி டெண்டர் பெறப்பட்ட விவகாரத்தில் பெருமளவு ஊழல் நடந்திருப்பதாகவும், எனவே இதுகுறித்து சி.பி.ஐ., விசாரணை தேவை எனவும் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.