Breaking News
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியின் போது விராட் கோலி வாக்கி டாக்கியில் பேசியதாக சர்ச்சை
இந்தியா-நியூசிலாந்து இடையே நடைபெற்ற முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி  53 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, சக வீரர்களுடன் டக்- அவுட்டில் (வீரர்கள் இருக்கும் இடம்) அமர்ந்து இருந்தார். அப்போது, வாக்கி டாக்கியில் விராட் கோலி பேசிய காட்சிகள் நேரடி ஒளிபரப்பில் வெளியானது.
 கிரிக்கெட் போட்டியின் போது தொலைத்தொடர்பு சாதனங்களை பயன்படுத்தக்கூடாது என்று விதிகள் இருந்தும் அதை விராட் கோலி மீறிவிட்டதாக சில ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனால், இந்த விவகாரம் பலத்த சர்ச்சையை கிளப்பிய நிலையில், ஐசிசி ஊழல் தடுப்பு ஆணையத்திடம் உரிய அனுமதி பெற்ற பிறகே, கோலி வாக்கி டாக்கி பயன்படுத்தியதாக ஐசிசி விளக்கம் அளித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
டக் அவுட்டில் உள்ள வீரர்களுடன் ஒய்வறையில் இருக்கும்  உதவி பணியாளர்கள் பேசுவதற்காக ஐசிசி ஊழல் தடுப்பு ஆணையத்திடம் அனுமதி பெற்ற பிறகு விராட் கோலி வாக்கி டாக்கியை பயன்படுத்தியதாக ஐசிசி அதிகாரி தெரிவித்தார். குறிப்பிட்ட தூரம் மட்டுமே பேசக்கூடிய அலைவரிசை கொண்ட இந்த வாக்கி டாக்கியில் பேசுவதை யாரும் இடை மறித்து கேட்க முடியாது என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது. மொபைல் போன்கள்தான் போட்டியின் போது பேசக்கூடாது என்று விதிகள் உள்ளதாகவும் ஐசிசி விளக்கம் அளித்துள்ளது. இதன் மூலம் விராட் கோலி மீது எழுந்துள்ள சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.