அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் டுவிட்டர் கணக்கு செயலிழந்தது
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் @realdonaldtrump கணக்கு, “ஒரு டுவிட்டர் பணியாளரின் கவனக்குறைவாக செயலிழந்தது” என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.
டிரம்பின் கணக்கு 11 நிமிடங்கள் செயலிழந்த நிலையில் இருந்ததாகவும், அதுகுறித்த விசாரணையை தற்போது தொடங்கியுள்ளதாகவும் ட்விட்டர் தெரிவித்துள்ளது.
டுவிட்டரில் தீவிரமாக இயங்கிவரும் டிரம்பை 4.17 கோடி பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். இதுகுறித்து அவர் கருத்தேதும் தெரிவிக்கவில்லை.
வியாழக்கிழமை மாலையில் டிரம்பின் கணகை பார்க்க வந்தவர்களுக்கு, “மன்னிக்கவும், அந்த பக்கம் இல்லை!” என்று ஒரு செய்தியை மட்டுமே காண முடிந்தது.
கணக்கை மீட்டெடுக்கப்பட்ட பின்னர், டிரம்பின் முதல் ட்வீட் குடியரசுக் கட்சியின் வரி குறைப்பு திட்டத்தை குறித்து இருந்தது.
அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ கணக்கான @POTUS பாதிக்கப்படவில்லை.