இறால் மக்கன்வாலா
என்னென்ன தேவை?
வெண்ணெய் – 1/2 கப்,
பிரிஞ்சி இலை – 2,
பட்டை – 2,
கிராம்பு – 10,
ஏலக்காய் – 3,
வெங்காயம் – 2,
விதை நீக்கப்பட்ட காஷ்மீர் காய்ந்தமிளகாய் – 15,
முந்திரி – 1/2 கப்,
இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள்ஸ்பூன்,
தக்காளி – 4,
உப்பு – தேவைக்கு,
இறால் – 1 கிலோ,
சர்க்கரை – 1 சிட்டிகை,
காய்ந்த வெந்தய இலை – 1 டீஸ்பூன்,
ஃப்ரெஷ் கிரீம் – 1/4 கப்.
எப்படிச் செய்வது?
கடாயில் வெண்ணெயை சேர்த்து பட்டை, கிராம்பு, ஏலக்காய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, காஷ்மீர் காய்ந்தமிளகாய், இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய தக்காளி, முந்திரி, உப்பு சேர்த்து 10 நிமிடம் நன்றாக வதக்கவும். பின்பு ஆறவைத்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் சிறிது வெண்ணெய் சேர்த்து பிரிஞ்சி இலை தாளித்து, அரைத்த விழுது, இறாலை சேர்த்து நன்கு வேகவிட்டு இறக்கும்பொழுது ஒரு சிட்டிகை சர்க்கரை, காய்ந்த வெந்தய இலை சேர்த்து, கடைசியாக ஃப்ரெஷ் கிரீம் சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.