மழை வெள்ளம்: முகாம்களில் 900 பேர்
: மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 18 முகாம்கள் அமைக்கப்பட்டு, அதில் 900 பேர் தங்கியுள்ளதாகவும் அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.
முகாம்
சென்னையில் அவர் கூறியதாவது: சென்னையில் அதிகாரிகள் குழு வெள்ள மீட்பு பணிகளை கண்காணித்து வருகின்றனர். 24 மணிநேரமும் கண்காணிப்பதோடு, வெள்ள நீரை அகற்றும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். நிவாரண முகாம்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களுக்கு செல்கின்றனர். வெள்ள நீர் வடிய துவங்கியதும் திரும்பி செல்கின்றனர்.
அதிகாரிகள்
சென்னையில் 18 முகாம்கள் அமைக்கப்பட்டு 900 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் உள்ளவர்களுக்கு தேவையான உணவு, பொருட்கள் வழங்கப்படுகின்றன. மாநகராட்சியில் மீட்பு பணிக்காக 15 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உள்ளனர். காஞ்சிபுரத்தில் மழை நிவாரண பணிகளை பார்வையிட கூடுதலாக 7 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.