ஆக்கி வீராங்கனை நிக்கி பிரதானுக்கு ரூ.15 லட்சம் ஜார்கண்ட் அரசு அறிவிப்பு
ஜப்பானில் நடந்த ஆசிய கோப்பை பெண்கள் ஆக்கி போட்டியில் இந்திய அணி, சீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த ஜார்கண்ட் வீராங்கனை நிக்கி பிரதானுக்கு ரூ.15 லட்சம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று அந்த மாநில விளையாட்டு மந்திரி அமர் பாரி அறிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலம் உருவான நாளான நவம்பர் 15-ந் தேதி நடைபெறும் விழாவில் இந்த ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. வில்வித்தை வீராங்கனைகளான தீபிகா குமாரி, லட்சுமி ராணி மான்ஹி, ரிமில் பிருலி ஆகியோருக்கும் விருது வழங்கப்படுகிறது.