Breaking News
பயண சீட்டின்றி பயணம்: கடந்த 7 மாதங்களில் மத்திய ரெயில்வேக்கு ரூ.100.67 கோடி அபராதம் வசூல்

ரெயில் பயணிகளுக்கு சிறந்த சேவை செய்வதற்கும் மற்றும் பயண சீட்டு இன்றி பயணம் செய்பவர்களை கட்டுப்படுத்தவும் மத்திய ரெயில்வே நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் வருமான துறையினர் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான 7 மாதங்களில் ரெயில் பயணிகளிடம் சோதனை நடத்தியது.

இதில், பயண சீட்டு இல்லாதவர்கள் மற்றும் கட்டணம் செலுத்திடாமல் பொருட்களை ஏற்றி செல்லுதல் ஆகியவற்றின் கீழ் 19.82 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 16.37 லட்சம் என்ற எண்ணிக்கையில் இருந்தது. இது 21.08 சதவீதம் அதிகம்.

இதனால் ரூ.100.67 கோடி அளவிற்கு அபராத தொகையாக ரெயில்வே நிர்வாகத்திற்கு வசூல் கிடைத்துள்ளது. இது கடந்த வருடம் இதே காலகட்டத்தில் ரூ.80.02 கோடி அளவாக இருந்தது. இது 25.81 சதவீதம் அதிக வருவாய் ஆகும்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.