மும்பையில் பெண் கதறலை கண்டு கொள்ளாது காருடன் இழுத்துச் சென்ற போலீசார்
மும்பையில் சாலையோரத்தில் நின்ற காரில் பெண் ஒருவர், தனது 7 மாத குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டிருந்ததையும் பொருட்படுத்தாமல், விதிகளை மீறியதாக கூறி, காரை மீட்பு வாகனம் மூலம் போலீசார் இழுத்து சென்ற வீடியா சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த பெண் எவ்வளவோ கூறியும் போலீசார் கண்டு கொள்ளவில்லை.
அலட்சியம்
அந்த காரில் அமர்ந்திருப்பவர் ஜோதி மாலே என தெரியவந்துள்ளது. கடந்த நவ.,09(வெள்ளிக்கிழமை) மகாராஷ்டிரா மாநிலம் மாலட் நகரின் எஸ்வி சாலை பகுதியில் மாலை 5.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. அப்போது, தனக்கும், குழந்தைக்கும் உடல்நலமில்லை என அந்த பெண் சத்தம் போட்டு கூறியும், மருந்து சீட்டுகளை காண்பித்த போதும், அதனை போலீஸ் அதிகாரி கண்டுகொள்ளவில்லை.