Breaking News
ஈரான்–ஈராக் எல்லையில் பயங்கர நிலநடுக்கம்; 370 பேர் பலி
ஈரான்–ஈராக் நாடுகளின் எல்லையில் ஜக்ரோஸ் மலைப்பிரதேசம் உள்ளது. இதன் பெரும் பகுதி ஈரான் எல்லைக்குள் கெர்மான்ஷா என்ற மாகாணத்துக்குள் இருக்கிறது. ஈராக்கின் குர்திஸ்தான் மாகாணத்தின் கிழக்கு நகரான ஹலாப்ஜாவும் இந்த மலைப்பகுதியில் அமைந்த முக்கிய நகராகும். இவை அவ்வப்போது நிலநடுக்கத்துக்கு உள்ளாகும் அபாயகர பகுதிகள்.இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று இப்பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 23.2 கிலோ மீட்டர் ஆழத்தில் 31 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் ஸ்கேல் அளவில் 7.3 புள்ளியாக பதிவானது. இந்த நிலநடுக்கம் சில வினாடிகள் நீடித்தது.

குழந்தைகள், பெண்கள், முதியோரை அழைத்துக்கொண்டு அலறியடித்தவாறு வீடுகளை விட்டு வெளியே ஓடினர்.எனினும் பலத்த நில அதிர்வு காரணமாக 10 கிராமங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டம் ஆயின. ஈரானின் சர்போல் –இ ஜகாப் என்ற சிறுநகரம் முற்றிலுமாக சேதம் அடைந்தது. அங்குள்ள 2 மருத்துவமனைகளும் பலத்த சேதம் அடைந்ததால் நிலநடுக்கத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் ஈரானில் 350 பேரும், ஈராக்கில் 20 பேரும் பரிதாபமாக உயிர் இழந்தனர். இடிபாடுகளுக்குள் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிக்கி படுகாயம் அடைந்தனர். இவர்களில் 400 பேர் ஈராக்கியவர்கள் ஆவர்.


Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.