516 கிலோமீட்டரை 7 மணி நேரத்தில் கடந்து குழந்தை உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர்
திருவனந்தபுரம் கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள பரியாரம், மருத்துவகல்லூரி மருத்துவமனையில் 31 நாள் குழந்தைக்கு பாத்திமா லபியா மூச்சு திணறல் காரணமாக சேர்க்கபட்டு இருந்தார். குழந்தையின் உடல் நிலை மோச மானதால் அவசர இருதய ஆபரேஷனுக்காக குழந்தையை மருத்துவமனை டாக்டர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ சித்ரா திருநாள் மிஷன் மருத்துவமனைக்கு அனுப்ப முடிவு எடுத்தனர். இதற்கான ஏற்பாடுகளை செய்து மருத்துவமனை ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். ஆம்புலன்சை காசர்கோட்டை சேர்ந்த தமீம் என்பவர் ஓட்டினார். கண்ணூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு 516 கிலோமீட்டர் ஆகும். இந்த தூரத்தை ஆம்புலனஸ் டிரைவர் 7 மணி நேரத்தில் கடந்து குழந்தையை மருத்துவமனையில் சேர்த்து உள்ளார். அருகிலுள்ள விமான நிலையங்கள் (மங்களூர் அல்லது கோழிக்கோடு) மூன்று மணிநேரம் தொலைவில் இருந்ததால் குழந்தையை கண்ணூரில் இருந்து திருவனந்தபுரம் சாலை வழியாக கொண்டு செல்ல முடிவு செய்யபட்டது. ஒரு விமான ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யும் போது குறைந்தது ஐந்து மணி நேரம் தேவைப்படும். எனவே, இந்த முடிவு செய்யப்பட்டது. ஆம்புலன்ஸ் தடையின்றி செல்ல கேரள போலீசாரும் போக்குவரத்து சிக்கல்களை தீர்ப்பதாக கூறி அதற்கான நடவடிக்கைகளை மேற் கொண்டனர். கண்ணூர் போலீஸ் சூப்பிரெண்டு இதற்காக ஒரு குழுவை நியமித்து ஆம்புலன்ஸ் செல்ல வழை வகுத்தார். போலீசாருடன் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு சேர்ந்து இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். தமீம் புதன்கிழமை இரவு 8.23 மணிக்கு ஆம்புலன்சை எடுத்து உள்ளார். வியாழக்கிழமை காலை 3.23 மணிக்கு ஆம்புலனஸ் திருவனந்தபுரம் ஸ்ரீ சித்ரா திருநாள் மருத்துவமனையை அடைந்து உள்ளது. மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் தயாரக இருந்தனர். உடனடியாக குழந்தை சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டது. கண்ணூரில் இருந்து திருவனந்தபுரம் வாகனத்தில் வர குறைந்தது 14 மணி நேரமாகும் . மேலும் சாலைகள் குறுகிய சாலைகளாகவும் உள்ளது. மணிக்கு 76. 4 கிலோ மீட்டர் வேகத்தில் தமீம் ஆம்புலனசை ஓட்டி வந்து உள்ளார்.