டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
ஜெயலலிதா மறைவை தொடர்ந்து காலியாக உள்ள ஆர்கே நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. ஓட்டு எண்ணிக்கை டிசம்பர் 24ம் தேதி நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழக முதல்வராக இருந்த, ஜெயலலிதா, கடந்த ஆண்டு டிச., 5 ம் தேதி இறந்தார். அவரது மறைவால், சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அந்த தொகுதிக்கு, ஏப்ரலில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வாக்காளர்களுக்கு, தினகரன் பணத்தை வாரி இறைத்ததால், தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து ஆர் கே நகர் இடைத்தேர்தல் குறித்த வழக்கில் ‘டிச., 31க்குள், இடைத்தேர்தலை நடத்த வேண்டும்’ என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், ஆர் கே நகர் இடைத்தேர்தல் டிச., 21 ல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வேட்புமனு தாக்கல் ஆரம்பம்: நவம்பர் 27வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள்: டிச.,4பரிசீலனை: டிச.,5வேட்புமனுக்களை திரும்ப பெற கிடைசி நாள்: டிச.,7ஓட்டுப்பதிவு : டிச.,21 ஓட்டு எண்ணிக்கை: டிச.,24இடைத்தேர்தலின் போது யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் ஒப்புகை சீட்டுடன் கூடிய இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது.