மீண்டும் சத்தியாகிரகம்: அன்னா ஹசாரே அறிவிப்பு
லோக்பால் நியமனம் மற்றும் விவசாயிகள் தற்கொலைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி, டில்லியில், அடுத்த ஆண்டு, மார்ச், 23ல், சத்தியாகிரக போராட்டம் நடத்தப்போவதாக, சமூக ஆர்வலர், அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
லோக்பால்:
இதுகுறித்து அன்னா ஹசாரே பேசியதாவது: லோக்பால் நியமனம் கோரி, பல முறை பிரதமருக்கு கடிதம் எழுதியும் பலனில்லை. லோக்பால் அமைப்பதன் மூலம், ஊழலை தடுக்க முடியும். ஆனால், லோக்சபாவில், எதிர்க் கட்சி தலைவர் இல்லாததால், லோக்பால் நியமனத்தை செயல்படுத்த முடியாத நிலை உள்ளதாக, மத்திய அரசு கூறுகிறது.
அவல நிலை:
விவசாயிகள் தற்கொலைக்கு தீர்வு காண, எந்த அரசும் முன் வருவதில்லை. 22 ஆண்டுகளில், 12 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். விவசாயிகளின் அடிப்படை வாழ்வாதாரத்தை காக்க, எவ்வித நடவடிக்கையும் எடுக்காததே, இந்த அவல நிலைக்கு காரணம். இதே காலத்தில், எத்தனை தொழில் அதிபர்கள் தற்கொலை செய்துள்ளனர் என்பதை நான் அறிய விரும்புகிறேன்.
சத்தியாகிரகம்:
லோக்பால் நியமனம், விவசாயிகள் பிரச்னைக்கு நிரந்த தீர்வு கோரி, அடுத்த ஆண்டு, மார்ச், 23ல், டில்லியில், சத்தியாகிர போராட்டம் நடத்த உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.