ஒபாமா அலுவலக கழிவறையை சுத்தம் செய்ய கூட தகுதியில்லாதவர் டிரம்ப்
அமெரிக்க பத்திரிகை டிரம்ப்பை வறுத்தெடுத்து தலையங்கம் வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக ஜனவரியில் டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். தேர்தல் பிரசாரத்தின் போதே, அவர் மீது பல பெண்கள், பாலியல் புகார் கூறினர். டிரம்ப் மீதான இந்த புகார்கள், தற்போது அமெரிக்காவில் மிகப் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பெண், எம்.பி., கிரிஸ்டன் கில்லிபாராண்ட், டிரம்ப் குறித்து டுவிட்டரில் விமர்சித்தார்.
இந்நிலையில் அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையான யு.எஸ். டுடே பத்திரிகை தலையங்கம் டிரம்ப்பை தாறுமாறாக விமர்சித்து எழுதியுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது, ஊழல் செனட்டர்களை ஆதரவாளர்களாக வைத்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்த பதவிக்கு சிறிதும் தகுதியில்லாதவர். அதுமட்டுமல்ல முன்னாள் அதிபர் ஒபாமாவின் அலுவலக கழிவறையை சுத்தம் செய்வதற்கும், முன்னாள் அதிபர் டபிள்.யு.புஷ்ஷின் சூவை பாலிஷ் போடுவதற்கும் கூட லாயக்கில்லாதவர். இவ்வாறு அந்த தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.