
மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில அளவிலான பாரா தடகள விளையாட்டு போட்டி – வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் அமைச்சரிடம் வாழ்த்து பெற்றனர்
தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தில் 25/02/2024 & 26/02/2024 ஆகிய இரு தினங்களில் நடைபெற்றது. அதில் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த பாரா விளையாட்டு சங்கம் சார்பாக சப் ஜுனியர் மற்றும் ஜூனியர் பிரிவுகளில் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் வீராங்கனைகள் பங்கு பெற்று பதக்கங்களை வென்று குவித்தனர் . இவர்களில் சிலர் தேசிய அளவிலான பாரா தடகள விளையாட்டுப் போட்டியில் டெல்லியில் கலந்து கொண்டுள்ளனர். இதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்கள் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்நிகழ்வில், தூத்துக்குடி மாவட்ட பாரா விளையாட்டு சங்க தலைவர் முகமது நசீர், துணைத் தலைவர் வழக்கறிஞர் என்.எஸ்.கே. கிறிஸ்டோபர் விஜயராஜ், துணைத் தலைவர் காட்சன் ,செயலாளர் ஸ்டீபன், துணைச் செயலாளர், பொருளாளர் நீல ராஜன் , ஈசி நம்பர் ரிகானா ,ஈசி மெம்பர் அஜிஸ் ஆகியோர் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.