மக்கள் நீதி மய்யம் பேச்சாளர்களை நியமித்தார் கமல்
புதிதாக மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை ஆரம்பித்துள்ள கமல், கட்சியின் 10 பேர் கொண்ட மாநில பேச்சாளர்கள் கொண்ட பட்டியலை பெயரை அறிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் பிப்.,21ம் தேதி அரசியல் களத்தில் இறங்கினார். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்தில் தனது அரசியல் பயணத்தை துவக்கினார். மதுரை மாநாட்டில் கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என பெயர் வைத்து கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து அரசியில் வேலைகளில் கமல் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் தனது கட்சிக்கு 10 பேர் கொண்ட பேச்சாளர்களை கமல் அறிவித்துள்ளார்.
10 பேர்:
ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி மவுரியா, எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார், முரளி அப்பாஸ், கமிலா நாசர், பட்டிமன்ற பேச்சாளர் ஞான சம்பந்தன், ரங்கராஜன், ஆர்.ஆர்.சிவராமன், சவுரி ராஜன், நடிகை ஸ்ரீபிரியா மற்றும் கவிஞர் சினேகன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.