Breaking News
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 38 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை: சமர்ப்பிக்க இன்று கடைசி நாள்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கு 38,271 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கான விண்ணப்ப விநியோகம் 22 அரசு மற்றும் தனியார் மருத்துவம் மற்றும் சென்னை யில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் கடந்த 11-ம் தேதி தொடங்கியது. நேற்று மாலை 5 மணியுடன் விண்ணப்ப விநியோகம் நிறைவடைந்தது. அரசு இடங்களுக்கான விண்ணப்பத்தை ரூ.500-க்கான கேட்பு வரைவோலை (டிடி) கொடுத்தும், நிர்வாக ஒதுக்கீடு இடங் களுக்கான விண்ணப்பத்தை ரூ.1,000-க்கான கேட்பு வரைவோலை (டிடி) கொடுத்தும் நீட் தேர்வில் தகுதிப் பெற்ற மாணவ, மாணவிகள் வாங்கிச் சென்றனர். அரசு இடங்களுக்கு விண்ணப்பிக்கும் தாழ்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் அருந்ததியர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவிகள் சாதிச் சான்றிதழ் நகல் கொடுத்து விண்ணப்பத்தைப் பெற்றனர்.

8 நாட்கள் நடந்த விண்ணப்ப விநியோகத்தில் அரசு இடங் களுக்கு 24,933 விண்ணப்பங் களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 13,338 விண்ணப்பங்கள் என மொத்தம் 38,271 விண்ணப்பங்கள் விற்பனையாகின. இவைதவிர www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org என்ற சுகாதாரத்துறையின் இணைய தளங்களில் இருந்தும் மாணவ, மாணவிகள் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ தபால் மூலமாகவோ செயலாளர், தேர்வுக்கு, மருத்துவக் கல்வி இயக்ககம், 162, ஈ.வெ.ரா.நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-600010 என்ற முகவரிக்கு இன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தரவரிசைப் பட்டியல் வரும் 28-ம் தேதி வெளியிடப்படுகிறது.

முதல்கட்ட கலந்தாய்வு

முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 1-ம் தேதி தொடங்கி 5-ம் தேதி வரை நடைபெறுகிறது. இரண் டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 16-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடக்க உள்ளது என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித் துள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.