Breaking News
தமிழகம் முழுவதும் 4.25 லட்சம் லாரிகள் ஓடவில்லை

கடந்த 3 தினங்களாக நடை பெறும் லாரி வேலைநிறுத்தப் போராட்டத்தால் மாநிலம் முழு வதும் 4.25 லட்சத்துக்கும் அதிமான லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் முடங்கியுள்ளது. விலைவாசியும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தப் போராட்டத்தில் டேங்கர் லாரிகளும் பங்கேற்பது குறித்து இன்று முடிவு எடுக்கப் படவுள்ளது.

3 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி கடந்த 20-ம் தேதி முதல் நாடு தழுவிய அளவில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங் கிரஸ் தொடங்கியது.

இந்த போராட்டம் 3-வது நாளாக நேற்றும் நீடித்தது. இதனால் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சரக்குகள் தேக்கமடைந்துள்ளன. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

போராட்டம் குறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் எம்.ஆர்.குமாரசாமி கூறியதாவது:

தமிழகத்தில் மொத்தம் 4.50 லட்சம் லாரிகளில் 4.25 லட்சத் துக்கும் அதிகமான லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

சரக்குப் போக்குவரத்து மூலம் அரசுக்கு கிடைக்கும் வரி வருவாயும் பாதிக்கப்பட்டுள்ளது. 8 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இழந்துள்ளனர். போராட்டத்துக்கு பொதுமக்கள் தரப்பில் ஆதரவு கேட்டு 23-ம் தேதி (இன்று) காலை முதல் மாலை வரை வாகனங்களை இயக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளோம். ஓரிரு தினங்களில் மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.

லாரி வேலைநிறுத்தப் போராட் டத்துக்கு முதல் இரு தினங்கள் தமிழ்நாடு கோழிப்பண்ணையா ளர்கள் சங்கம், தமிழ்நாடு முட்டைக் கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்திருந்தது. இதனால், நாமக்கல் மண்டலத்தில் கடந்த இரு தினங்களில் ரூ. 20 கோடி மதிப்பிலான 5 கோடி முட்டைகள் தேக்கமடைந்தன.

இந்நிலையில் நேற்று முதல் முட்டை விநியோகம் தொடங்கப்பட் டுள்ளது. அதேநேரம் கோழித்தீவ னத்துக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு, வான கரம், மதுரவாயல், செங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லாரிகளில் கருப்பு கொடி கட்டி மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரி வித்தனர்.

சென்னை, காஞ்சிபுரம், திரு வள்ளூர் மாவட்டங்களில் மட்டும் 10 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை. காய்கறி வரத்து குறைவதால், விலை உயர்வு அபாயம் ஏற்பட் டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் நேற்று நிலவரப்படி, காய்கறிகளின் விலை வழக்கத்தை விட ரூ.2 முதல் ரூ.5 வரையில் உயர்ந்து காணப்பட்டது. வேலைநிறுத்தம் தொடர்ந்து நீடித்தால், தற்போதுள்ள இருப்பு காலியாகி பற்றாக்குறை ஏற்பட்டு, விலையும் கூடும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் எஸ்.யுவராஜ் கூறியதாவது: ஒவ்வொரு நாளும் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்புள்ள சரக்குகள் தேங்கியுள்ளன. தமிழக அரசு எங்களது போராட்டத்தை முடக்க நினைப்பதை கண்டிக்கிறோம். மேலும், எங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் சென்னையில் இன்று (23-ம் தேதி) ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு உணவு எண்ணெய் டேங்கர் லாரி உரிமையாளர் சங்க தலைவர் ஜானகிராமன் கூறியதாவது:

பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள் கொண்டு செல்லும் 300-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகளும் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்பது குறித்து இன்று முடிவு செய்து அறிவிக்கிறார்கள். இதேபோல், குடிநீர், பால் போன்ற அத்தியா வசிய பொருட்களை கொண்டு லாரிகளும் இந்த போராட்டத்தில் பங்கேற்பது குறித்து சம்பந்தப்பட்ட சங்க நிர்வாகிகளிடம் பேசி ஆதரவு கேட்கவுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.