படியில் தொங்கினால் வழக்கு பதிவு: ரயில்வே ஆணையர் எச்சரிக்கை
தெற்கு ரயில்வே கோட்ட ஆணையர் லூயிஸ் அமுதன் கூறியபோது, ‘‘புறநகர் ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்பு படையினர் நிறுத்தப் பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். ரயிலில் வாசல் அருகே நின்றும், தொங் கிக்கொண்டும் வருபவர்களை போலீஸார் பிடிப்பார்கள். அவர் களை ரயிலில் இருந்து இறக்கி, காவல் நிலையம் அழைத்துச் செல்வார்கள். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படும்” என்றார்.
சென்னை ரயில்வே கோட்டத்தில் 2016-ல் 83 பேர், 2017-ல் 69 பேர், 2018-ல் கடந்த ஜூன் வரை 39 பேர் என கடந்த 3 ஆண்டுகளில் ரயிலில் இருந்து தவறி விழுந்து மட்டும் 191 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.