வெப்ப சலனத்தால் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்யும்
சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது:
தமிழகம், புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இன்று மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் இடிமேகங்கள் உருவாகி சில பகுதிகளில் லேசான மழை பெய்யும்.
அதிகபட்ச வெப்பநிலை 98.6 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 82.4 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும். கேரளாவில் தென் மேற்கு பருவமழை குறைந்துள் ளது. இதனால், தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் மழை குறைந்திருக்கிறது. அங்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்கிறது.