பல ஆண்டுகளுக்கு பின் பூமிக்கு மிக அருகில் செவ்வாய் கிரகம் இன்று வருகிறது
உயிர்கள் வாழ வாய்ப்பு இருக்கலாம் என கருதப்படும் செவ்வாய் கோள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகின்றன. இதன் பலனாக அங்கு 20 கி.மீ. பரப்பளவில் பனி நிறைந்த ஏரி இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தநிலையில் செவ்வாய்கிரகம் இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் பூமிக்கு மிக அருகில் வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். சுமார் 10 ஆண்டுகளுக்குப்பின் நடைபெறும் இந்த அரிய நிகழ்வை மக்கள் பார்க்கலாம் என ஐதராபாத்தில் உள்ள பிர்லா அறிவியல் மைய இயக்குனர் சித்தார்த் கூறினார். இந்த கோள், வானில் சிவப்பு நிறத்தில் தெரியும் எனவும் அவர் தெரிவித்தார்.