கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
சுவீடனைச் சேர்ந்தவர் பராஹ் அல்ஹாஜா. 24 வயதான இந்த பெண் சமீபத்தில் வேலைக்காக, ஒரு நிறுவனம் நடத்திய இண்டர்வியூக்கு சென்றுள்ளார். அப்போது உள்ளே சென்ற போது, இண்டர்வியூ எடுக்கும் நபரைக் கண்ட இந்த பெண், அவரிடம் கை குலுக்கிக் கொள்ளாமல், தன்னுடைய இதயத்திற்கு அருகில் கையை வைத்து அதாவது இஸ்லாமிய விதிப்படி மரியாதை கொடுத்துள்ளார்.
உடனே அந்த நபர் உங்களுக்கு இண்டர்வியூ முடிந்துவிட்டது என்று கூறியுள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த பெண், வெளியில் வந்து லிப்டில் ஏறி கண்ணீருடன் சென்றுள்ளார். அதன் பின் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து. வழக்கை விசாரித்த நீதிமன்றம் பராஹ் அல்ஹாஜா-வுக்கு 3400 பவுண்ட் நஷ்ட ஈடு வழங்கும் படி தெரிவித்துள்ளது.
மேலும் பராஹ் அல்ஹாஜா கூறுகையில், எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் இருக்கிறது. ஆனால் சுவீடனில் அது மிகவும் குறைவு, நான் ஆண் மற்றும் பெண் இருவரிடமும் கை குலுக்கிக் கொள்வதில்லை. ஆனால் நான் அவர்களுக்கு மரியாதை தருவேன் என்று கூறியுள்ளார்.