வீடு புகுந்து வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை திருடியவர் கைது – திருடப்பட்ட பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் மீட்பு.

வீடு புகுந்து வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை திருடியவர் கைது – திருடப்பட்ட பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் மீட்பு.

தூத்துக்குடி, செபத்தையாபுரம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் செல்லதுரை (62) என்பவர் கடந்த 03.03.2024 அன்று வீட்டில் இல்லாதபோது, இவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் அங்கு இருந்த ரொக்க பணம் ரூபாய் 1 லட்சம் மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்றுள்ளார்.

இதுகுறித்து செல்லதுரை அளித்த புகாரின் பேரில் சாயர்புரம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், அதே பகுதியைச் சேர்ந்த நேவிஸ் மகன் தனேஷ் செல்வகுமார் (35) என்பவர் செல்லத்துரையின் வீட்டிற்குள் புகுந்து அங்கு இருந்த பணம் மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து சாயர்புரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மம்முது மற்றும் போலீசார் தனேஷ் செல்வகுமாரை கைது செய்து அவரிடமிருந்து திருடப்பட்ட ரொக்க பணம் ரூபாய் ஒரு லட்சம் மற்றும் ரூபாய் 20,000/- மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து சாயர்புரம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )