அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் ஒரிகனும் ஒன்றாகும். இது அமெரிக்காவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு ஒரிகனிலுள்ள பண்டோன் வடமேற்கு கடற்கரை பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பண்டோனிலிருந்து 165 மைல் தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் அறிவித்துள்ளது.
கடற்கரை பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து சுனாமி எச்சரிக்கை ஏதும் விட படவில்லை. இதனிடையே நிலநடுக்கத்தால் அப்பகுதிகளிலிருக்கும் சில வீடுகள் குலுங்கியதாகவும், பெரும் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றும் உள்ளூர் ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.